Wednesday 10 June 2015

நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்ட மானியக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்:

நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தில் மானியக் கடன் பெற ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்காலம் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கோழியின மேம்பாட்டுத் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்துக்கு நிகழாண்டில் 160 பயனாளிகளுக்குத் தலா ரூ. 1.29 லட்சம் கடன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டக் கடன் தொகையில், 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், தொழில் முனைவோர், சுய உதவிக் குழுவினர் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுப் பெறுவோருக்கு தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் 3 நாள்கள் சிறப்புப் பயிற்சியும், சான்றிதழும் வழங்கப்படும்.
நாட்டுக் கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 30-ம் தேதிக்குள் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Source: http://www.dinamani.com/edition_trichy/trichy/2015/06/11/நாட்டுக்-கோழி-வளர்ப்புத்-தி/article2859764.ece

No comments:

Post a Comment