Thursday 25 June 2015

தேசிய தோட்டக்கலை திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்


பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் ரெட்டி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்துக்கு 205-16 ஆம் ஆண்டுக்கு ரூ. 1,68,267 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மா அடர் நடவிற்கு ரூ. 2.952 கோடியும், மா இயல்பான நடவிற்கு ரூ. 7.68 லட்சமும், எலுமிச்சை சாகுபடிக்கு ரூ. 1.80 லட்சமும், வீரிய காய்கறிகள் சாகுபடி செய்ய ரூ. 15 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மானியத் தொகைக்கு விவசாயிகளுக்கு நடவு மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளது. திசு வாழை சாகுபடிக்கு ரூ. 6.150 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
மலர் இனத்தில் இதர விவசாயிகளுக்கு கிழங்கு வகை (சம்பங்கி) மலர்கள் சாகுபடிக்கு ரூ. 9.375 லட்சமும், உதிரி மலர்கள் (சாமந்தி பூ, கனகாம்பரம், மல்லிகை) சாகுபடிக்கு ரூ. 3 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
மிளகாய் சாகுபடிக்கு ரூ. 1.20 லட்சமும், மஞசள் சாகுபடிக்கு ரூ. 3 லட்சமும், பெரிய வெங்காயம் சாகுபடிக்கு ரூ. 36 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட சாகுபடி இனத்தின் கீழ், பாலித்தீன் பசுமைக் குடில் அமைக்க ரூ. 4.45 லட்சமும், நிழல் வலை அமைக்க ரூ. 7.10 லட்சமும், நெகிழி மூடாக்கு அமைக்க ரூ. 9.60 லட்சமும் மண் புழு உரம் தயாரித்தல் இனத்தில் நிரந்தர அமைப்பு தொட்டி அமைத்து மண்புழு உரம் தயாரிக்கரூ. 2.50 லட்சமும், தாற்காலிக அமைப்புக்கு ரூ. 40 லட்சமும் மானியம்
வழங்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment