Thursday 18 June 2015

வேளாண் காப்பீட்டுத் திட்டம்: இழப்பீட்டு தொகையை விவசாயிகள் வங்கிகளில் பெறலாம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் கடந்த 2013-14-ம் ஆண்டின் சம்பா பயிர் காப்பீட்டுத் தொகையாக காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து வரப்பெற்ற ரூ. 118 கோடி காப்பீட்டுத் தொகையை தங்களது பகுதியில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கிகளை அணுகி விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் டாக்டர் கே.வி.எஸ். குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2013-14-ல் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் ரூ. 118 கோடி இழப்பீட்டுத் தொகை ஒதுக்கியுள்ளது. காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்குத் தற்போது பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. காப்பீட்டுத் தொகை வழங்கு நாள் குறித்த விவரம் அந்தந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, காப்பீடு செய்த விவசாயிகள் தங்களுக்கான காப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் காப்பீட்டுத் தொகையை வழங்குவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால், பின்வரும் அலுவலர்களை அவர்களது செல்லிடப்பேசிகளில் தொடர்பு கொள்ளலாம். புதுக்கோட்டை துணைப் பதிவாளர்- 94442 48543, அறந்தாங்கி துணைப் பதிவாளர்- 81227 52855, புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கி- 94434 11235, புதுக்கோட்டை இணைப் பதிவாளர்- 94432 77335.

No comments:

Post a Comment