Thursday 18 June 2015

இயற்கை முறை எள் உற்பத்தி பயிற்சி முகாம்



புதுச்சேரியில் இயற்கை முறையில் அதிக அளவில் எள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை மற்றும் சீரிய தொழில் நுட்பங்கள் மூலம் எள் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி விநாயகம்பட்டு கிராமத்தில் ஒரு மாத காலம் நடந்தது.
பயிற்சியில் விவசாயிகளுக்கு, அதிக மகசூல் பெறுவதற்கான வழிவகை, அக்னி அஸ்திரம், முட்டை கரைசல், திறன்மிகு நுண்ணுயிர் கரைசல் தயாரிப்பது குறித்த செயல்முறை  விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், சூரிய சக்தியால் இயங்கும் விளக்கை வைத்து பயிர்களை அழிக்கும் பூச்சிகளை பிடிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆத்மா திட்ட இயக்குநர் ரவிப்பிரகாசம் தலைமை தாங்கினார்.  விவசாயி சுப்பிரமணியன், மதகடிப்பட்டு துணை வேளாண் இயக்குநர் முத்துக்கிருஷ்ணன், சோரப்பட்டு வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன், ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, கிராம விரிவாக்க பணியாளர் ஆதி நாராயணன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Source: இயற்கை-முறை-எள்-உற்பத்தி-பயி/article2874911.ece

No comments:

Post a Comment