Wednesday 17 June 2015

நெல்லை, தூத்துக்குடி கார் சாகுபடி; பாபநாசம் அணை நீர் திறப்பு




திருநெல்வேலி : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பாசனத்திற்காக பாபநாசம் அணையை கலெக்டர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஜூன் முதல் தேதி கார் பருவ நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணை நீர் திறந்து விடுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக சில தினங்கள் தாமதமாக தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று மாலையில் கலெக்டர் மு.கருணாகரன் பாபநாசம் அணை ஷட்டரை திறந்து வைத்தார். அவர் கூறியதாவது: அணையில் தற்போது 71.90 அடியாக நீர்மட்டம் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் வடக்குகோடைமேலழகியான், தெற்கு கோடைமேலழகியான், நதியுன்னி, கன்னடியன், கோடகன் கால், திருநெல்வேலி கால், பாளையங்கால், தூத்துக்குடி மாவட்டத்தின் மருதூர் அணையின் கால்வாய்கள் என மொத்தம் 11 கால்வாய்களின் மூலம் மொத்தம் 38 ஆயிரத்து 434 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணைக்கு வினாடிக்கு 504 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று துவங்கி அக்டோபர் 31ம் தேதி வரை மொத்தம் 138 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்இருப்பை கொண்டு தண்ணீர் வெளியேற்றப்படும் அளவு அதிகரிக்கவோ குறைக்கவோ வாய்ப்புள்ளது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்

Source: http://www.dinamalar.com/district_detail.asp?id=1276184

No comments:

Post a Comment