Tuesday 9 June 2015

அறிவியல் ரீதியில் கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

கரூர், :  கரூர் பண்டுதகாரன்புதூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் முனைவர் அகிலா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக தொழில் முனைவோர் பயிற்சி மையத்தின் நிதியுதவியுடன், லாபகரமான கால்நடை பண்ணையம் பயிற்சி வரும் 15ம்தேதி முதல் 20ம்தேதி வரை 6நாட்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

இதில் அறிவியல் ரீதியில் கறவைமாடு வளர்ப்பு, ஆடுவளர்ப்பு, கோழிவளர்ப்பு, பன்றி வளர்ப்பு, ஆகியவற்றில் முக்கிய பங்களிக்கும் பராமரிப்பு முறைகளான இனங்களை தேர்வு செய்வது, பண்ணை வீட்டமைப்பு, தீவன மேலாண்மை, கால்நடை மற்றும் கோழிகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள், மூலிகை மருத்துவ சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், வங்கி கடன் உதவி, பண்ணைக்கான காப்பீடு, பண்ணை பொருளாதாரம், ஆகிய தலைப்புகள் பசுந்தீவன உற்பத்தி, பதப்படுத்துதல், கலப்பு தீவனம் தயாரித்தல், அசோலாவளர்ப்பு, தூய்மையான பால்உற்பத்தி, பால்பொருட்கள் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரித்தல், சாண எரிவாயு உற்பத்தி ஆகிய தலைப்புகள் குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்களால் நடத்தப்பட உள்ளது.
பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் அலுவலக தொலைபேசி 04324-284335, தொடர்பு கொண்டு விரைந்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

Source : Dhinakaran

No comments:

Post a Comment