Thursday 18 June 2015

ஆண்டு முழுவதும் பூப்பறிக்கலாம்: சம்பங்கியில் புதிய முறை


015 
திண்டுக்கல் :திண்டுக்கல் அருகே உள்ள விராலிப்பட்டி விவசாயி பெரியசாமி, ஆண்டு முழுவதும் பூப்பறிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப முறையில் சம்பங்கி, மல்லிகையை சாகுபடி செய்துள்ளார்.இதற்காக அவர் ஒரு ஏக்கரில் 'பாலி ஹவுஸ்' அமைத்துள்ளார். அதில் சம்பங்கி, மல்லிகைப் பூக்களை ஒருங்கிணைத்து பயிரிட்டுள்ளார். தரைப்பகுதியில் மல்லிகையும், அதற்கு ஊடுபயிராக தொட்டியில் சம்பங்கியும் உள்ளன. ஒவ்வொரு செடிக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும் வகையில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.இருவகை செடிகளும் மேலும், கீழும் இருக்கும்படி பயிரிட்டுள்ளதால், அவற்றிற்கு சத்துக்கள் கிடைப்பதிலும் பாதிப்பு இல்லை. தினமும் 10 கிலோ மல்லிகையும், 5 கிலோ சம்பங்கியும் கிடைக்கின்றன.விவசாயி பெரியசாமி கூறியதாவது: ஒருங்கிணைந்த முறையால் 2 ஏக்கரில் பயிரிட வேண்டிய பூக்களை, ஒரு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். பனிக்காலத்தில் மல்லிகை பூக்காது. 'பாலி ஹவுசில்' வெப்பநிலை மாறாது என்பதால் ஆண்டு முழுவதும் பூக்கிறது. மழை பெய்யும்போது பூக்காது. 'பாலி ஹவுசுக்கு,' மானியம் போக ரூ.14 லட்சம் செலவு செய்தேன். இரு பூக்களிலும் தினமும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. ஆண்டு முழுவதும் வருமானம் வருகிறது, என்றார்.


Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1277928  

No comments:

Post a Comment