Thursday 18 June 2015

வானிலைத் தகவல்களை அறிய விவசாயிகளுக்கு இலவச எஸ்.எம்.எஸ்.

வானிலை குறித்த முன்னெச்சரிக்கைத் தகவல்களை விவசாயிகள் அறிந்து கொள்வதற்காக இலவச குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
 இந்தச் சேவையை மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், தில்லியில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இடி, மின்னல், புயல், மழை ஆகியவை பற்றிய முன்னெச்சரிக்கைத் தகவல்கள் விவசாயிகளுக்கு உதவும் என்பதால், இந்தச் சேவையை அறிமுகம் செய்து வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
 "எம்கிஸான்' (mkisan.gov.in) என்ற இணையதளத்தில் விவசாயிகள் தங்களது செல்லிடப்பேசி எண், தாங்கள் விரும்பும் மொழி ஆகியவற்றைப் பதிவு செய்வதன் மூலம், வானிலைப் பற்றிய தகவல்களை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை இலவசமாகப் பெற முடியும். அந்த இணையதளத்தில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 இதுதவிர, விவசாயிகள் பயிர்க் காப்பீடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளவும், பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறவும், இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.
 


Source:  http://www.dinamani.com/india/2015/06/19/வானிலைத்-தகவல்களை-அறிய-விவச/article2874748.ece

No comments:

Post a Comment