Thursday 11 June 2015

விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி வகுப்பு


தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதன்படி காலை 11 மணிக்கு காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மற்ற 7 ஊராட்சி ஒன்றியங்களில் மாலை 3 மணிக்கும் இந்த பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இதில் 2015-16-ம் ஆண்டு கால்நடை பராமரிப்புத்துறையினரால் செயல்படுத்தப்பட உள்ள அரசு மானியத்துடன் கூடிய நாட்டுக்கோழி வளர்ப்புத்திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இதில் முன்னோடி வங்கி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். முதலில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பில் தர்மபுரி மாவட்ட கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் விவேகானந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். 

Source: http://www.dailythanthi.com/News/Districts/Dharmapuri/2015/06/12005430/Farmer-Nattukkoli-The-Culture-Training-Class.vpf

No comments:

Post a Comment