Wednesday 10 June 2015

மானிய விலையில் விதை நெல்: விவசாய அதிகாரி தகவல்


கூடலூர்:மானிய விலையில் விதை நெல் இருப்பில் உள்ளதாக, கம்பம் விவசாய உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.விவசாய உதவி இயக்குனர் அசோகன் கூறியதாவது: கம்பம் வட்டார விவசாயிகளுக்கு ஏ.டி.டி-45, ஏ.டி.டி.-36, ஆகிய விதை நெல், கம்பம் விவசாய விரிவாக்க மையத்தில் இருப்பில் உள்ளது. இது 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. குறுவைப் பருவத்தில் பயிரிடுவதற்கு ஏற்ப இந்த விதை நெல் அமைந்துள்ளது. 

வீரிய ஒட்டுரக விதைகளை வாங்கும் போது, விதைக்கான உரிமம் மற்றும் அங்கீகாரம் பெற்ற கடைகளில் மட்டும் வாங்க வேண்டும். திருந்திய நெல் சாகுபடி முறையில், ஹெக்டேருக்கு 5 கிலோ விதையளவில் 22.5 செ.மீ., பயிர் இடைவெளியில் தண்ணீர் மட்டம் 2.5 செ.மீ., அளவிலும் பின்பற்றுவதால், விதையளவு குறைவதோடு, தண்ணீர் தேவையும் குறைகிறது. திருந்திய நெல் சாகுபடியில், இளவயது நாற்று, ஒற்றை நாற்று நடவு முறை, சதுர நடவு, கோனோ களைக்கருவி மூலம் களையெடுத்தல், நீர் மறைய நீர்க்கட்டுதல், இலைவண்ண அட்டை கொண்டு தழைச்சத்து மேலாண்மை ஆகிய தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதால் தூர்கள் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் கூடுதலாக கிடைக்கும். இயந்திர நடவு முறை மற்றும் மானிய விபரங்களை அந்தத்தப் பகுதி விவசாய உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Source:   http://www.dinamalar.com/district_detail.asp?id=1271866

No comments:

Post a Comment