Thursday 25 June 2015

விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி


திருவாடானை தாலுகா காடாங்குடி கிராமத்தில் வேளாண்மை தொழிநுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடைபெற்றது.
  திருவடானை தாலுகா காடாங்குடி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜ் தலைமை வகித்தார்.
  வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட தலைவர் பாண்டி சிறப்புரையாற்றினார்.
   ராமநாதபுரம் கடலோர உழவர் ஆராய்ச்சி மைய பேராசிரியர் ராம்குமார், காளான் கூடாரம் அமைத்தல், காளான் வளர்ப்பு முறைகள், பாதுகாப்பு முறைகளை பற்றி விளக்கவுரையாற்றினார்.  வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை தொழில்நுட்ப வல்லுநர்கள் ராஜேஸ்வரி, இளையராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment