Monday 29 June 2015

விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு திட்ட பயிற்சி



தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குநர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் முன்னிலை வகித்தார்.
சேதுபாவாசத்திரம், பேராவூரணி வட்டாரத்தை சேர்ந்த, 70 விவசாயிகளுக்கு நெல் பயிறுக்கான தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயிற்சி, பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடந்தது. தஞ்சை மாவட்ட தரக்கட்டுப்பாடு சேதுபாவாசத்திரம் வட்டார உதவி இயக்குநர் பெரியசாமி, விதைச்சான்று உதவி இயக்குநர் மணிமாறன், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் ராஜாரமேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
அரசு அறிவித்துள்ள குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில், பாய் நாற்றங்கால் தயாரித்து, நடவு இயந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு, 2,375 ரூபாய் வேளாண் பொறியியல் துறை மூலம் மானியம் பெறலாம்.
குறுவை பருவத்தில் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில், 315 ரூபாய் செலுத்தப்படும். 
விவசாயத்தில் விதை உற்பத்தி செய்து, அதிக லாபம் பெறுவதற்கு குழு அடிப்படையில் விதை பண்ணை அமைத்து, விதைச்சான்று நடைமுறையை பின்பற்றி சான்று விதை உற்பத்தி செய்து, விநியோகம் செய்ய வேண்டும்.
பயிறுக்கு சேதம் விளைவித்து மகசூல் இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, நன்மை செய்யும் பூச்சிகள் அதிகளவில் வயலில் இருப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும், என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
பயிற்சியில் வேளாண்மை அலுவலர்கள் சாந்தி, ராணி, மகேந்திரவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment