Wednesday 17 June 2015

சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்க 29 விவசாயிகளுக்கு தலா ரூ.3.84 லட்சம் மானியம் அளிப்பு


சேலம் மாவட்டத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைக்க 29 விவசாயிகளுக்கு அரசு மானியமாக தலா ரூ.3.84 லட்சம் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், நீர்வள, நிலவள திட்டம், சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம் குறித்து செவ்வாய்க்
கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏ.கொமாரபாளையம் கிராமத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  4 ஹெக்டர் பரப்பளவில் ரூ.76,600 மானியத்தில் பயிர் செய்யப்பட்ட எண்ணெய்ப் பனைத் தோட்டம், மலையாளப்பட்டியில் நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் பெத்தநாயக்கன்பாளையம் சாமை சாகுபடி விவசாய குழுவுக்கு ரூ.2.04 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்ட சிறுதானிய, கல், உமி நீக்கும் இயந்திரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், பகுடுபட்டு பகுதியில் ரூ.3.84 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி பம்புசெட்டுகள் குறித்து பெத்தநாயக்கன்பாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் விநாயகமூர்த்தி விளக்கினார்.
இதில், துணை வேளாண்மை அலுவலர் அன்பழகன் (பெத்தநாயக்கன்பாளையம்), வேளாண்மை அலுவலர் நாகராஜன், துணை வேளாண்மை அலுவலர் ஜோஸ்வாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டங்கள் குறித்து ஆட்சியர் க.மகரபூஷணம் கூறியது:
நீர்வள, நிலவளத் திட்டம் - உலக வங்கியின் நிதி உதவியுடன் சேலம் மாவட்டத்தில் மேல் வெள்ளார், சுவேதா உப வடிநிலப் பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது.
மேல் வெள்ளார் உப வடிநிலப்பகுதியில் 2014 -15 ஆம் ஆண்டு பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சாமை சாகுபடியாளர் குழுவுக்கு சிறுதானியங்கள் சுத்திகரிப்பு இயந்திரம் 100 சத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. மானியத் தொகை ரூ.2.04 லட்சம் ஆகும். சேலம் மாவட்டத்திற்கு மொத்தமாக 6 இயந்திரங்கள் ரூ.12.25 லட்சம் மானியத்தில் வழங்கப்
பட்டுள்ளன.
மேலும், 2014- 15-ஆம் ஆண்டில் சூரிய சக்தியால் இயங்கும்
பம்பு செட்டுகள் அமைத்திட 29 எண்கள் இலக்காகப் பெறப்பட்டு முழுமையாக சாதனை அடையப்பட்டது.
இத்திட்டத்தில் 5 குதிரை திறன் கொண்ட பம்பு செட்டுகள் வழங்கப்பட்டன. மொத்த விலையான ஒரு எண்ணிற்கு ரூ.5,01,512-இல் அரசு மானியமாக ரூ.3.84 லட்சம் வழங்கப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் 5 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் நிறுவிட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மானிய மதிப்பு ரூ.19.20 லட்சமாகும். சூரிய சக்தி பம்பு செட்டுகளை அமைக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என்றார்.
Source: சூரிய-சக்தி-பம்பு-செட்டுகள்-/article2871343.ece

No comments:

Post a Comment