Wednesday 27 May 2015

குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி உரம் வினியோகம் அதிகாரி தகவல்

குறுவை சாகுபடிக்கு தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு இருப்பதாக வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக் குனர் ராஜேந்திரன் கூறி னார்.

குறுவை சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடி பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. பல இடங்களில் குறுவை சாகுபடி பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. குறுவை சாகுபடிக்கு தேவையான அளவு உரம் வரவழைக்கப்பட்டு, விவ சாயிகளுக்கு வினியோகம் செய்யும் பணியும் நடந்து வருகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் உரம் திருவாரூரில் உள்ள தஞ்சை கூட்டுறவு விற்பனை இணைய குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு உள் ளது. இருப்பு வைக்கப்பட்டு உள்ள உரத்தின் தரம், எடை அளவு குறித்து வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்கு னர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.

ஆய்வு

அப்போது அவர் உர மூட்டைகளை தராசில் வைத்து சரியான எடை இருக்கிறதா? என்று பார்த்தார். இதை தொடர்ந்து உர மூட்டை களை தவிடு பரப்பி அதன் மீது அடுக்கி வைக்கும்படியும், சரி யான அளவில் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் வினி யோகம் செய்யவும் அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கு பின்னர் வேளாண்மை தரக்கட்டுபாடு உதவி இயக்குனர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார்.

அப்போது அவர் கூறியதா வது:-

உரம் இருப்பு

திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகு படிக்கு தேவையான அளவு உரம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தட்டுப் பாடின்றி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி திரு வாரூரில் உள்ள தஞ்சை கூட் டுறவு விற்பனை இணைய குடோன்களில் யூரியா, டி.ஏ.பி. உள்ளிட்ட உரங்கள் 1837 டன் இருப்பு வைக்கப்பட்டுள் ளது. இதேபோல் மாவட் டத்தின் பிற பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் குடோனில் 589 டன் யூரியா, 967 டன் டி.ஏ.பி., 429 டன் எம்.ஓ.பி., 61 டன் காம்ப்ளக்ஸ் உரம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழு வதும் 3891 டன் உரம் கையி ருப்பு உள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு உரம் தட் டுப்பாடின்றி வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

ஆய்வின்போது கூட்டுறவு சங்க துணை பதிவாளர் நடராஜன், தஞ்சை கூட்டுறவு விற்பனை இணைய இணை செயலாளர் தட்சிணாமூர்த்தி, வேளாண்மை தரக்கட்டுபாடு அலுவலர் உதயகுமார், வட் டார வேளாண்மை அலுவலர் செந்தில், உர நிறுவன பிரதிநிதிகள் ஜெயபிரகாஷ், பொம் மண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment