Friday 29 May 2015

திருவில்லிபுத்தூர் பகுதியில் மாம்பழ சீசன் துவங்கியது வட மாநிலங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்

திருவில்லிபுத்தூர், : திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு மாமரம் வளர்ப்புக்கு ஏற்ற பகுதி. இதனால், இப்பகுதியில் ஏராளமான விவாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் விளையும் மாம்பழத்திற்கு தனி ருசி உண்டு. தற்போது மா சீசன் துவங்கியுள்ளதால் நன்கு விளைந்த மாம்பழங்களை பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பறிக்கப்படும் மாம்பழங்கள் தொழிலாளர்கள் மற்றும் மலை வாழ் மக்கள் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. இதில் அதிகளவு சப்பட்டை, பஞ்சவர்ணம்,  ரசகுல்லா, கிளி மூக்கு மாம்பழம் மற்றும் ஊறுகாய்க்கு பயன்படுத்தப்படும் கொட்டை மாங்காய் போன்றவை அதிகளவில் பறிக்கப்படுகிறது. இந்த மாங்காய்கள் மற்றும் பழங்கள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாம்பழங்கள் தனி பிளாஸ்டிக் ட்ரேக்களில் அடைத்து சரக்கு வாகனங்களில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

Source : Dhinakaran

No comments:

Post a Comment