Monday 11 May 2015

நத்தத்திலும் விளையுது குளிர் பிரதேச 'ஸ்டார் புரூட்'


திண்டுக்கல்: குளிர் பிரதேசத்தில் விளையும், உடல் கொழுப்பை குறைக்க வல்ல 'ஸ்டார் புரூட்' நத்தத்திலும் விளைவிக்கப்படுகிறது. கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் விளையும் 'ஸ்டார் புரூட்' நத்தம் மூங்கில்பட்டி பண்ணையிலும் விளைவிக்கப்படுகிறது. இப்பழம் இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு உட்பட 5 சுவைகள் உடையது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. 'மனோரஞ்சிதம்' என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது. முழுக்க, முழுக்க மாட்டு சாணம், மண்புழு உரம், மக்கிய காய்கறி தாவர இலைகள் உரமாக இடப்படுகிறது. இதில் பூச்சி தாக்குதலும் இருக்காது.
விவசாயி ஆனந்தவேல் கூறியதாவது: குற்றலாம் உட்பட குளிர் பிரதேசங்களில் விளையும் 'ஸ்டார் புரூட்', நத்தத்திலும் விளைவிப்பதற்காக, கேரளாவில் செடியாக வாங்கி வந்தேன். இதற்கென சீசன் கிடையாது. அனைத்து மாதங்களிலும் காய்க்கக் கூடியது. மார்க்கெட்டில் ஒரு பழம் ரூ.10க்கு விற்கிறது. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் 'ஸ்டார் புரூட்'டில் நிறைந்துள்ளன. இவரை 98944 88884ல் தொடர்பு கொள்ளலாம்.


Source: Dinamalar

No comments:

Post a Comment