Friday 1 May 2015

தென்னை சார்ந்த தொழில் தொடங்க மானியம் அதிகாரி தகவல்

தென்னை சார்ந்த தொழில் தொடங்க மானியம் அதிகாரி தகவல்

தென்னை சார்ந்த தொழில் தொடங்க மானியம் வழங்கப் படுவதாக தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரி பரமசிவம் கூறினார்.

தென்னை நாற்றுப்பண்ணை

மத்திய தென்னை வளர்ச்சி வாரிய சென்னை மண்டல கள அதிகாரி பரமசிவம் கூறியத £வது:-

தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்துள்ள தென்னை உற்பத்தி யாளர்கள், சங்க உறுப்பினர் களுக்கு பல் வேறு விதமான மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ரூ.26 கோடி மதிப்பில் 4079 விவசாயி களுக்கு இலவசமாக இடு பொருட்கள் வழங்கப்பட் டுள்ளன. இதில் கோவை மாவட் டத்திற்கு மட்டும் ரூ.6 கோடிக்கு வழங்கப்பட்டுள் ளன. தென்னை வளர்ச்சி வாரியத்தில் கடந்த நிதி ஆண்டில் செலவிடப்படாத தொகை செயல்விளக்க பண்ணை திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு கூடுதலாக 1500 எக்டேர் பரப்பளவிற்கு இடு பொருட்கள் வழங்கப் படும். அடுத்த ஆண்டு முதல் தென்னையில் ஊடுபயிர் செய்ய வாழைக் கன்றுகள் வழங்கப்படும்.

தென்னை நாற்று உற்பத்தி செய்யும் பண்ணை இந்தியா வில் 7 இடங்களில் உள்ளது. இதை தொடர்ந்து கூடுதலாக தமிழ்நாட்டில் உடுமலையில் புதிதாக நாற்றுப்பண்ணை தொடங்கப்பட்டுள்ளன. தென்னை நாற்றுக்கள் தயாரித்து வழங்கும் திட்டத் திற்கு மானியம் வழங்கப் படுகின்றன. 6250 நாற்றுக்கள் தயாரிப்பதற்கு ரூ.50 ஆயிர மும், 25 ஆயிரம் நாற்றுக் களுக்கு ரூ.2லட்சமும் மானியமாக வழங்கப்படு கின்றன.

தென்னை மரம் ஏற பயிற்சி

மேலும் தரமான தென்னை நெற்றுக்காய் தயாரிக்க 25 சதவீத மானியம், அதிகபட்ச மாக ரூ.6 லட்சம் மானியம் கிடைக் கும்.

டெக்னலாஜி விஷன் திட்டத்தில் தென்னை சார்ந்த தொழில் நுட்ப கருவி கள் தயாரிப்பவர்களுக்கு 25 சதவீத மானியம் வழங்கப் படும். தென்னை சார்ந்த 45 வகை தொழில் கள் செய்து ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு திட்டச் செலவில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படு கிறது. ரூ.50 லட்சம் வரை மானியம் பெறலாம்.

கிராமங்களில் படித்து வேலை இல்லாத இளைஞர் களுக்கு 6 நாள் தென்னை மரம் ஏறும் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. பயிற்சிக்குப் பிறகு ரூ.2800 மதிப்பிற்கு மரம் ஏறும் எந்திரம் வழங்கப்படுகின்றன. தென்னை மரங்களி லிருந்து நீரா (பதனீர்) தயாரித்து விற்பனை செய் வதன் மூலம் தேங்காயை விட அதிக லாபம் பெறலாம்.

அதற்கான தொழில் நுட்ப பயிற்சியை தென்னை வளர்ச்சி வாரியம் அளிக் கிறது. வாரியத்தில் பதிவு பெற்ற தென்னை உற்பத்தி யாளர் சங்கங்கள் தொடங்கி வாரியத்தில் பதிவு செய்ய தென்னை விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்வதற்கு காப்பீட்டு தொகையில் 50 சதவீதத்தை தென்னை வளர்ச்சி வாரியம் ஏற்கிறது.

இவ்வாறு அவர்கூறினார்.  

Source: Dailythanthi

No comments:

Post a Comment