Wednesday 6 May 2015

ஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும்"லக்னோ' கொய்யா

திண்டுக்கல் : ஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும் "லக்னோ 49' கொய்யாவை சாகுபடி செய்வதில் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த கொய்யா உத்திரபிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டது. எந்த காலத்திலும் சாகுபடி செய்யலாம். இவை 3 மாதத்தில் காய்க்க துவங்கும். ஆண்டு முழுவதும் காய்க்கும். அதிகபட்சம் 3 அடி வளரும். ஒரே செடியில் ஆண்டிற்கு 500 காய்கள் காய்க்கும். ஒரு பழம் 750 கிராம் வரை இருக்கும். அடர்வு முறையில் ஒரு ஏக்கருக்கு 800 செடிகள் வரை நடலாம். ஏக்கருக்கு மூன்று லட்சம் கிலோ கிடைக்கும். அதிக லாபம் கிடைப்பதால் "லக்னோ 49' கொய்யாக்களை சாகுபடி செய்வதில் திண்டுக்கல், பழநி, ரெட்டியார்சத்திரம், பலக்கனூத்து விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பலக்கனூத்து விவசாயி எம்.மனோஜ் கூறியதாவது: பழம் சுவையாக இருக்கும். கிலோ ரூ.60 க்கு விற்கலாம். இதனால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம் கிடைக்கும். பராமரிப்பு செலவு குறைவு. கொய்யா கன்றுகளை ஒட்டு முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தருகிறோம். ஒரு செடி ரூ.50 விற்கிறோம், என்றார்.

Source: Dinamalar

3 comments:

  1. where we will get this ottu ragam
    give his contact no

    ReplyDelete
  2. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete
  3. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete