Monday 4 May 2015

கடல் உணவு ஏற்றுமதி ரூ.30,000 கோடியாக உயர்வு


TamilDailyNews_9370342493058.jpg

நாகை: இந்தியாவில் கடல் உணவு ஏற்றுமதி ரூ.30,000 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர்  மணிமாறன் தெரிவித்தார். நாகை மீன்வள தொழில்நுட்ப நிலையத்தில், மின்னணு சாதனங்களின் பயன்பாடு, மீன்பதப்படுத்தும் பணியாளர்களுக்கான  மீன்பதன தொழில்நுட்பங்கள், இறால் பண்ணை உதவியாளர்களுக்கான அடிப்படை இறால் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி, நடைபெற்றது.

இதில் மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் பேசியதாவது: இந்தியாவில் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளதால் நம் நாட்டில்  இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவுகளின் மதிப்பு ரூ.30,000 கோடியாக உயர்ந்துள்ளது. மீன் பதனம் செய்வதில் பல தொழில்நுட்ப திறன்கள்  நம் பணியாளர்களுக்கு இல்லாத காரணத்தால் சில நவீனபதப்படுத்தும் தொழில் நுட்பங்களை நம நாட்டில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.  இத்தகைய பயிற்சிகள் மூலம் நவீன தொழில்நுட்பங்களை கையாளக்கூடிய மனிதவளம் உருவாகும் என்றார்.


Source: Dinakaran

No comments:

Post a Comment