Friday 29 May 2015

கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் விலை ரூ.100; மற்ற காய்கறிகள் விலையும் உயர்வு




கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விலை திடீரென உயர்ந்தது. ஒரு கத்தரிக்காய் ரூ.100 வரை விற்பனையானது.
ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.100
கோவில்பட்டி சுற்று வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. அதனாலும், இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாள் என்பதாலும், கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் நேற்று திடீரென உயர்ந்தது.
நேற்று முன்தினம் மொத்த விலையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.40 முதல் ரூ.45 வரை விற்றது. ஆனால் நேற்று காலையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.100 வரை விற்பனையானது. பின்னர் மதியம் ரூ.60 ஆக விலை குறைந்து விற்பனை ஆனது.
மற்ற காய்கறிகள்
அதேபோன்று நேற்று முன்தினம் ரூ.35–க்கு விற்ற ஒரு கிலோ கேரட் நேற்று ரூ.40–க்கு விற்பனையானது.
ரூ.40 முதல் ரூ.50–க்கு விற்ற ஒரு கிலோ காலி பிளவர் நேற்று ரூ.50 முதல் ரூ.70–க்கு விற்றது. ரூ.20–க்கு விற்ற ஒரு கிலோ முட்டைகோஸ் நேற்று ரூ.23–க்கு விற்பனையானது. மேலும் சில காய்கறிகளின் விலையும் உயர்ந்து இருந்தது.

Source : Dhinathanthi

No comments:

Post a Comment