Sunday 29 March 2015

அவுரி பயிரிட்டு வறட்சியை சமாளிப்பு! வாழ்வாதாரத்தை காக்க முயற்சி

கள்ளிக்குடி : கள்ளிக்குடி பகுதியில் சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து வருவதால் மானாவாரியான அவுரியை பயிரிட்டு விவசாயிகள் வறட்சியை சமாளித்து வருகின்றனர்.

கள்ளிக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் கண்மாய் மற்றும் குளங்கள் வற்றி கால்நடைகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி விவசாய பணிகளை துவங்கிய விவசாயிகள் பாதியில் அதை விட்டனர். இதனால் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பல பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டது. வாழ்வாதாரத்தை தக்கவைக்க சிவரக்கோட்டை, கரிசல்காலன்பட்டி போன்ற கிராமங்களில் விவசாயிகள் அவுரி, நித்தியகல்யாணி செடிகளை பயிரிட்டுள்ளனர்.
விவசாயி ராமகிருஷ்ணன் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் 30 ஏக்கரில் அவுரி மற்றும் நித்திய கல்யாணி பயரிட்டேன். மானாவாரி பயிரான இவைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை. ஆறு மாதங்களில் செடிகள் வளர்ந்து பூக்கள் பூக்கத் துவங்கும். அதன்பின் செடிகளை பறித்து காயவைத்து உலர்த்திய பின், மொத்தமாக துாத்துக்குடிக்கு அனுப்பி விடுவோம். அவுரியை செடியாக போட்டால் கிலோ ரூ.35 வரை விலை போகும். இலைகளை மட்டும் தனியாக பிரித்து அனுப்பினால் கிலோவிற்கு ரூ.100 கிடைக்கும். நித்தியகல்யாணி கிலோ ரூ.20 வரை விலை போகிறது என்றார்.

Source: 

No comments:

Post a Comment