Friday 13 March 2015

சின்ன சின்ன செய்திகள்

பதிவு செய்த நாள்

11மார்
2015 
00:00
கோ.12 ரக சோளம் : மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இந்த ரகம் உருவாக்கப்பட்டுள்ளது. குளிர்கால மானாவாரி கரிசல் நில பகுதிகளுக்கு ஏற்றது. கோ.8 சோளத்தை விட 22.4 சதம் கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடியது. சோதனையில் அதிக பட்சமாக ஒரு எக்டருக்கு 5300 கிலோ மகசூல் கொடுத்துள்ளது. மானாவாரியில் அதிக தானிய மகசூலும், அதிக அளவு தீவன மகசூலும், எக்டருக்கு 11.9 டன் கொடுக்கக் கூடியது. குருத்து ஈ தண்டு துளைப்பான், அடிச்சாம்பல் நோய் ஆகியவற்றின் தாக்குதலை தாங்கி வளரும் தன்மையுடையது. தென்மாவட்டங்களில் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் போது நன்கு செரிமனமாக்கும் தன்மை கொண்டது.
அரிவாள்மனைப் பூண்டு : சாலை ஓரங்களியெல்லாம் கேட்பாரற்று கிடக்கும் இதன் இலைக்கு இரத்தப்போக்கை நிறுத்தும் ஆற்றல் உண்டு. வெட்டுக்காயத்தின் மீது இதன் இலையைக் கசக்கிப் பிழிந்தால் ரத்தம் வெளியேறுவது சட்டென்று நிற்கும். சிறுசிறு காயங்களுக்கூட ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு ஓடும் நாம் காலுக்கு கீழே உள்ள இந்த மூலிகையின் சாற்றைப் பயன்படுத்தி முதலுதவி செய்து கொள்ளலாமே. தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் நிறைந்திருப்பது அரிவாள்மனைப் பூண்டு. இலைகளின் ஓரங்கள் ரம்பம் போன்று கூரிய முனையுடைய இந்த மூலிகைகளைச் களைச்செடி என்றே கருதுகின்றனர். மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த இலையை போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றன.
அரிவாள்மனைப் பூண்டின் விற்பனையாளரிடம் பற்றி கூறும் வியாபாரி கருப்பையா. மொபைல் : 98423 95441, ஒரு டன் ரூ.7000ம் வரை விற்பனையாகிறது. விருதுநகர் மாவட்டம் சதுரகிரிமலை அடிவாரத்தைச் சேர்ந்த வியாபாரி மற்றும் விவசாயியான கருப்பையா மழைக்காலத்துல அதிக இலைகளோட இருக்கும் போது அறுவடை செய்தால் இதுல மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கும்.
முண்டு மிளகாய் : கார்த்திகையில் விதைத்து சித்திரை, வைகாசி மாதங்களில் அறுவடை செய்யப்படும் முண்டு மிளகாய் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 19,280 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு மிளகாய் சாகுபடிக்கான செலவு ரூ.10,000 செய்தால் 3 மடங்கு லாபம் கிடைக்கும். மாவட்டத்தில் நிலவும் வறட்சியை நன்கு தாக்குப்பிடித்து வளரக்கூடிய முண்டு மிளகாய் தனித்தன்மையே அதன் அதிகபட்சமான காரத்தன்மை தான். அதனால் முண்டு மிளகாய்களுக்கு உலகளவில் நல்ல சந்தை உள்ளது. ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வெள்ளரி "சிம்ரன்' : சின் ஜெண்டா நிறுவனம் ஒரு வெள்ளரிக்காய் ஹைபிரிடை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது. அனுபவ விவசாயி "ஸ்ரீகாந்த், த/பெ.நாகராஜ் மணியம்மாள், தேன்கனிக்கோட்டை வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்-635 008. போன் : 95858 17182, கடந்த முறை சிம்ரன் போட்டிருக்கிறார். 50 கிலோ சிப்பங்களில் சந்தைக்கு எடுத்துச் செல்கின்றன. ஒரு சிப்பம் ரூ.2000க்கும் போகியிருக்கிறதாம். சமயத்துல ரூ.100, 80க்கும், ஏன் விற்காமல் கூட போவதுண்டு என்கிறார். சராசரியாக 50 கிலோ மூடை ரூ.400 - 500க்கு போகும் என்கிறார்.
45 நாட்களில் காய் கிடைக்க ஆரம்பிக்கிறது. அதிலிருந்து ஒன்றரை மாதங்கள் காய் தொடர்ந்து கிடைக்கும். ஒரு நாள் விட்டு ஒருநாள் அறுவடை. ஒரு காய் 200 கிராம் இருக்கும் போது மார்க்கெட் நன்றாக இருக்கும் என்கிறார். 45-வது நாளிலிருந்து 45 நாட்களுக்கு 50 கிலோ சிப்பம் 500 சிப்பங்கள் கிடைக்கும் என்கிறார் விவசாயி.
சித்ரா போன்ற ரகங்கள் போகும் போது காய் 1 அடி நீளமாக வருவதாகவும், சிம்ரன் போகும் போது கால் அடி வருவதாகவும் கூறுகிறார். காய் சைஸ் சின்னதானால் ஈஸியாக மார்க்கெட் ஆகும். சிம்ரனில் ஏகப்பட்ட பூக்கள் வருவதாகவும், எல்லா பூக்களையும் காயாக்கினால் 2-3 லாரி லோடு கிடைக்கும் என்றார் விவசாயி. தொடர்புக்கு: பாலகுரு, சின் ஜெண்டா, கிருஷ்ணகிரி. போன்: 94422 14885.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

No comments:

Post a Comment