Monday 2 March 2015

நீலகிரி மாவட்டத்தில் 45 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் கலெக்டர் சங்கர் தகவல்


ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 45 ஆயிரம் கால் நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப் படும் என்று மாவட்ட கலெக்டர் சங்கர் தெரி வித்தார்.

கோமாரி நோய் தடுப்பூசி

தமிழக அரசின் உத்தரவுப் படி கோமாரி நோயினை கட்டுப்படுத்திட மாநிலம் முழுவதும் உள்ள கால் நடை களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன்படி நீலகிரி மாவட்டத் தில் 8-வது சுற்று கோமாரி தடுப்பூசி போடும் பணி நஞ்ச நாடு பகுதிக்குட் பட்ட குருத் துக்குளி கிராமத் தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டகலெக் டர் சங்கர் தலைமை தாங்கி னார். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்கு னர் மனோகரன் முன்னிலை வகித்தார். பின்னர் 120 மாடு களுக்கு தடுப்பூசி போடப்பட் டன. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சங்கர் கூறிய தாவது:-

45 ஆயிரம் கால்நடைகள்

நீலகிரி மாவட்டத்தில் 42 ஆயிரத்து 929 பசு மாடுகளுக் கும், 2 ஆயிரத்து 71 எருமை மாடுகள் என மொத்தம் 45 ஆயிரம் கால்நடைகளுக்கு 26 மருத்துவ குழுவினர் இணைந்து கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த பணிகள் 21-ந் தேதி வரை நடைபெறும். மேலும், இதில் விடுபட்ட கால்நடை களுக்கு 22-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். நீல கிரி மாவட்டத்தில் கால் நடை பராமரிப்புத்துறையும், ஆவின் நிறுவனமும்இணைந்து இந்த தடுப்பூசி போடும் பணி களை செயல்படுத்தி வருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

இதில் அனைத்து கால் நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிவதற்காக கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படு வதற்கு முன்பும், தடுப்பூசி போட்ட பின்பும் கால்நடைகளின் ரத்தம் ஆய் விற்காக எடுத்துக் கொள்ளப் பட்டு, வேலூர் ராணி பேட்டையில் உள்ள நோய் தடுப்பு மருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

இதன் மூலம் கால்நடை களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, கோமாரிநோய் ஏற்படாமல் தடுக்கும் நடவ டிக்கை மேற்கொள்ளப் படும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

இந்த நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் குப்பன், உதவி இயக்குனர் சுகுமாரன், கால்நடை நோய் புலனாய்வுத் துறை சுதா உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.

Source : http://www.dailythanthi.com/News/Districts/Nilgiris/2015/03/02013636/Nilgiris-district45-thousand-cattle-immunized-against.vpf

No comments:

Post a Comment