Tuesday 10 February 2015

சின்ன சின்ன செய்திகள்

திவு செய்த நாள்

11பிப்
2015 
00:00
ஏல விவசாயிகளுக்கு ஸ்பைசஸ் போர்டு வழங்கும் மானியத்திட்டங்கள்: கீழ்கண்ட இனங்களுக்கு மானியம் பெறலாம்.
ஏலத்தட்டை நாற்றங்கால் அமைக்க, ஏலக்காய் மறுநடவு, நீர் மிதக்கும் நிலைகள் (தொட்டி, கிணறு) மோட்டார், பம்பு செட் வழங்குதல், நீர் தெளிப்பான்/சொட்டுநீர், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல், மண் அரிப்பைத் தடுக்க சுவர் கட்டுதல், ஏலக்காய் உலர்த்தும் இயந்திரம், பண்ணை உபகரணங்கள் வாங்குதல், தேனீ பெட்டி அமைத்தல், சிறந்த வேளாண் செய்முறைகள், நுண்ணுயிர்கள் டிரைகோடெர்மா, சூடோமோனாஸ், மெட்டாரைசியம், வெர்டிசிலியம், பேவேரியா பேசியான பேசிலியோ மைசெஸ், பச்சை மிளகாய் பிரிக்கும் இயந்திரம், பாலிதீன் விரிப்புகள் (மிளகு, மிளகாய், மஞ்சள் உலர்த்தி) மிளகு உலர்த்த மூங்கில் பாய்கள், கிராம்பு/மிளகு பறிக்க ஏதுவான ஏணி, மிளகு சுத்தம் செய்ய தரம் பிரிக்கும் இயந்திரம்.
தொடர்புக்கு: தமிழகத்திலுள்ள ஸ்பைசஸ் போர்டின் கள அலுவலகங்கள் - போடிநாயக்கனூர் - 04546 - 280317, வத்தலக்குண்டு- 0453 - 262 733, கோயம்புத்தூர் - 0422 - 227 2300, ஈரோடு- 0424 - 227 2300, நாகர்கோவில் - 0984 788 7464.
இதர அலுவலகங்கள்: இணை இயக்குநர், போடிநாயக்கனூர் - 04546 - 280 317, துணை இயக்குநர், திண்டுக்கல் - 0451 - 242 0626, இணை இயக்குநர், கோயம்புத்தூர் - 0422 - 247 4430.
மாம்பழத்தை விட மாங்காய்க்கு அதிக விலை : தமிழகத்தில் விளையும் கோடை மாங்காய்க்கு கேரளாவிலும், தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலும் நல்ல விலை கிடைக்கிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் கோடைக்காயை குறி வைத்து அடிக்கிறார்கள். ஏக்கருக்கு 3-4 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.
கோடை மாங்காய்க்கு ஏற்ற இரகங்கள்: கோடைப்பருவ மாங்காய்களில் பெரும்பகுதி காய்கறியாகவும், மீதி ஊறுகாய்க்குமாக விற்கப்படுகிறது. காய்கறி பயிருக்கு பெரும்பாலும் பெங்களூரா (தோத்தாபுரி / கல்லாமை) என்ற ரகத்தையே மக்கள் விரும்புகிறார்கள். வியாபாரிகள் வாங்குகிறார்கள். செந்தூர ரகமும், நீலம் (காசாலட்டு) ரகமும் காய்கறிக்காக விற்கப்படுகிறது. கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் ருமானி ரகம் ஆண்டு முழுவதும் காய்க்கிறது. காயாகவே நல்ல விலைக்கும் போகிறது.
சீரி என்பது வறட்சியைத் தாங்கி வளரும். நாட்டு ரகம். ஊறுகாய்க்கு விரும்பி வாங்கப்படுகிறது. கத்தேமார் என்பது பெரிய காய்கள் ரகம். இது ஊறுகாய்க்கு உரித்தான ரகம். நாம் பழத்துக்காக பயிரிட்டால் பூத்ததிலிருந்து 90 நாட்களில் அறுவடை செய்கிறோம். 100 நாட்களானால் கொம்பிலேயே பழுத்து விடும். நாம் காய்க்காக பயிரிட்டால் 65 - 70 சதம் முதிர்ச்சியே போதும். அதாவது பூத்ததிலிருந்து 70 நாட்களிலேயே அறுவடை செய்யலாம். காய்கள் அறுவடை செய்யும் போது பூத்த 60ம் நாளிலிருந்து 90ம் நாள் வரை 7-8 தடவைகளில் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிய காய்களை மட்டும் பறித்து அனுப்ப வேண்டும்.
ஆளில்லாமல் கதிர் அடிக்கும் இயந்திரம்: முன்னதாக இந்த மெஷினை அன்னபூர்ணா நிறுவனம் வடிவமைத்து தயாரித்து விநியோகித்துள்ள மக்காச்சோளம், சூரியகாந்தி, கம்பு போன்றவற்றிற்கான கதிரடிக்கும் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியாத நிலையில் தற்போது அன்ன பூர்ணா வடிவமைத்துள்ள "பலபயிர் கதிரடிக்கும் இயந்திரத்தில்' தானியக் கதிர்களை லோடுபண்ண ரோபோ போன்ற தனி இணைக்கருவி இயக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.5.70 லட்சம் முதல் மெஷினைத் தற்போது கர்நாடகாவில் விற்பனை செய்துள்ளது. வரவேற்பு அமோகமாக உள்ளது. பொதுவாக இதனை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் இதுவரை அதிக அளவில் முன்பணம் கொடுத்து ஆர்டர்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு : திரு.கீ.வெங்கடபதி, ஸ்ரீஅன்ன பூர்ணா அக்ரோ இன்டஸ்ட்ரீஸ், 2/65, கள்ளப்பாளையம் கிராமம், செட்டிபாளையம் போஸ்ட், கோயம்புத்தூர்-641 201. போன் : 94433 31670
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

No comments:

Post a Comment