Wednesday 7 January 2015

நிலத்தடி நீர் காப்போம்

பதிவு செய்த நாள்

07ஜன
2015 
00:00
ஒரு ரூபாய் செலவு இல்லாமல் உருவான 150 அடி நீளம் 10 அகலம் 40 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு குளத்தை கிணறாக வெட்டிய சாதனை விவசாயி. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராம பட்டினம் பஞ்சாயத்து, ஜலந்தூர் பிரிவில் வசிக்கும் விவசாயி செல்வராஜ். இவர் தனது தோட்டத்தில் மேற்கூறிய அளவில் குளம் வெட்டியுள்ளார்.
சென்ற 2007 ஆம் ஆண்டு அம்மாவின் ஆட்யில் மண்ணூர் கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்க தலைவராக சக்திவேல் இருந்த போது பொறியியல் துறை மூலமாக அம்மாவின் மேலான ஆணைக்கிணங்க 100 அடி நீள அகலம் 5 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு குளம் அமைத்து கொடுக்கப்பட்டது. தனது சொந்த நலனை விட மற்ற விவசாயிகளின் நலனை மனதில் கொண்ட இந்த விவசாயி இக்குளத்தை மெல்ல, மெல்ல ஆழப்படுத்தினார். தங்களின் தேவைகளுக்கு மண் தேவைப்படுவோர், சொந்த செலவில் மண் அள்ளிக் கொள்ள வேண்டும். ஏழை எளியோருக்கு மண் இலவசம். நாளடைவில் 40 அடி ஆழம் சென்று விட்டது. தனது கை காசு ஒரு ரூபாய் செலவில்லாமல் வெட்டப்பட்டுள்ள இக்குளத்தில் எல்லா காலத்திலும் 30 அடிக்கும் குறையாமல் தண்ணீர் எப்பொழுதும் இருக்கின்றது.
மேலும் இக்குளத்தில் 4000 மீன் குஞ்சுகளும் வளர்க்கின்றார். ஆழியார் பாசன திட்டத்தில் ஒரு மடை விட்டு ஒரு மடை நீர்ப்பாசன முறை உள்ளது. எனவே கிணறாக மாறிய குளத்தில் எப்போதும் நிறைவாகவே உள்ளது. அரசு எத்தனையோ செலவு செய்து மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை விளம்பரப் படுத்தினாலும் மக்களும் விவசாயிகளும் அலட்சியப்படுத்துகின்றனர். 
இத்திட்டத்தின் மூலம் மிகுந்த பயன் அடைந்த இந்த விவசாயி தனது 10 ஏக்கர் தோப்பில் 3000 வாழைகள் நட்டு சொட்டு நீரில்லாமல் பாசனம் செய்து வருகின்றார். தென்னையும், வாழையும் இத்தனை கொடுமையான வறட்சி காலத்திலும் பசுமையாக காட்சியளிக்கின்றது. அரசின் சலுகைகளை பெறவும் வங்கிக்கடன் பெறவும் கல்விக்கடன் பெறவும் ஒவ்வொரு விவசாயம் தன் தோட்டத்தில் குளம் வெட்டியிருக்க வேண்டும் என்ற சட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
ஊடகங்களும், மீடியாக்களும் பொறியியல் துறை கல்வியில், அரசியலில், தொழிலில் சாதனை செய்வோரை முன்னிறுத்தி விளம்பரங்கள் செய்கின்றன. ஆனால் வேதனையில் கிடக்கும் சாதனை விவசாயிகளை கண்டு கொள்வதில்லை. மழைநீர் சேகரிப்பு குட்டைகளை அமைத்து மழை காலங்களில் வெளியேறும் உபரிநீர் ஆற்றிலும் அதன் மூலம் கடலிலும் கலக்காமல் இருக்கவும் வழி செய்து நிலத்தடி நீர்மட்டம் உயர ஒவ்வொரு விவசாயி தன் சொந்த முயற்சியில் அரசின் உதவியோடு ""பண்ணைக்குட்டைகள்'' அமைத்தால் நாமும் நமது சந்ததிகளும் நலமாக வாழலாம்.
தனது 10 ஏக்கர் தோட்டத்தில் 700 தென்னைகள், 4000 மீன்கள், 10000 கோழிகள், 10 மாடுகள், 3000 வாழைகள் ஆகியவைகளை நல்ல முறையில் பராமரித்து செயற்கை உரத்தை பயன்படுத்தாமல் சாணம் மற்றும் கோழி எரு போன்ற இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்தி இயற்கையோடு இணைந்து வாழ்ந்து அரசின் மழைநீர் சேகரிப்பின் பயனால் தன்னிறைவு அடைந்த இந்த விவசாயின் சாதனையை நேரிலும், முகநூல் (Face book) மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இவரை தொடர்பு கொள்ள : 97157 87777
ஆர்.செல்வராஜ்
koraiselvanma@gmail.com

Source: 

No comments:

Post a Comment