Wednesday 28 January 2015

ஜனவரி 30-இல் மண் புழு உர தயாரிப்பு பயிற்சி முகாம்

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஜனவரி 30-ஆம் தேதி மண் புழு உரம் தயாரிப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.
 இயற்கை உரங்களை இடுவதால் மண்ணின் பண்புகள் மேம்பட்டு பயிர் விளைச்சல் அதிகரிக்கின்றது. ஆனால் எளிதல் கிடைக்காததாலும், அதிக விலையாலும் உழவர்கள்
இயற்கை உரங்களை பயன்படுத்தத் தயங்குகின்றனர்.
 பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தென்னை மட்டைகள் மற்றும் ஓலைகளில் வியத்தகு அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அவற்றை முறையாக மறுசுழற்சி செய்தால் ரசாயன உரங்களின் தேவையை வெகுவாகக் குறைக்கலாம்.
 இதைக் கருத்தில் கொண்டு டிராக்டர் கொண்டு இயக்கப்படும் தென்னை மட்டை வெட்டும் இயந்திரத்தின் செயல் விளக்கத்துடன் கூடிய மண் புழு உரம் தயாரித்தல் குறித்த
ஒரு நாள் பயிற்சி அழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஜன.30-ம் தேதி நடைபெறவுள்ளது.
 இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆழியார் நகரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையம் அல்லது 04253-288722, 9443059228 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Source: ஜனவரி-30-இல்-மண்-புழு-உர-தயாரிப/article2640637.ece

No comments:

Post a Comment