Wednesday 17 December 2014

நவீன தொழில்நுட்பம்


பதிவு செய்த நாள்

17டிச
2014 
00:00
கழிவு நீரிலிருந்து மின் உற்பத்தி : நமது நாட்டிலுள்ள நகரங்களில் கிடைக்கும் கழிவுகளிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
உயர்வேக எரிவாயு நுட்பம்: இந்தியாவில் 1950 முதல் வளியற்ற நுண்ணுயிர்கள் மூலம் உயர்வேக எரிவாயு உருவாக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது.
தொழில்நுட்பத்தின் செயல்பாடு : உயர்வேக கூட்டு கலன் என்பது மேல் செல்லும் வளியற்ற திடப்படுக்கை அடைப்புடன் நிலையினை நெகிழி கலன்களின் கூட்டு கலவையாகும். இதன் மூலம் வளியற்ற பகுதியில் வாடும் நுண்ணுயிர்கள் குறிப்பாக நுண்ணுயிர்கள், உயிர்ச்சுருள் அளவில் வரை மிகவும் ஏதுவாகின்றது. இத்தகைய வட்டு வளியற்ற திடப்படுக்கை அமைப்பு பல்வேறு தொழிற்சாலை நீர்கழிவுகள் நன்கு மாசு நீக்கு தன்மை பெற்றுள்ளன.
""தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு : வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள உயிர் சக்தி துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக எளிய முறையில் அமைக்க கூடிய உயர்வேக எரிவாயு கலன் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கலன் காகித ஆலைகள், சவ்வரிசி தொழிற்சாலைகள், பால்பதனிடும் பால்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளிவரும் கழிவுநீரை சுத்திகரிக்க மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. இந்த தொழிற்சாலைகளை சுமார் 70 - 90 சதம் வரை கழிவு நீரிலிருந்து கழிவுகள் சுத்தம் செய்யப்படுவதுடன் 60 -70 சதம் உள்ள மீதேன் எரிவாயும் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிற்சாலைகளில் ஆற்றல் தேவையில் 40 முதல் 100 சதம் வரை பூர்த்தி செய்கின்றன.
தமிழ்நாட்டில் சுமார் 700க்கும் மேற்பட்ட சவ்வரிசி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 50 தொழிற்சாலைகளை மட்டும் பெரிய அளவிலான எரிவாயு கலன்களைக் கொண்டு மீத்தேன் வாயு உற்பத்தி செய்யும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் சுமார் 100 முதல் 150 தொழிற்சாலைகளில் மட்டும் திறந்தவெளி தொட்டிகளில் கழிவுநீர் சேமிக்கப்பட்டு மீத்தேன் வாயு சேகரிக்கும் கலன்கள் அமைந்துள்ளன. சில தொழிற்சாலைகள் கழிவு நீரினை மறு சுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்கின்றன.
இந்த கலன்களின் மூலமாக சுத்திகரிக்கும் பொழுது கிடைக்கும் கழிவுநீரின் அளவிற்கேற்ப நாள் ஒன்றுக்கு 5 முதல் 2000 கன மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்து, 1 கிலோ வாட்ஸ் முதல் 250 கிலோ வாட்ஸ் வரை மின்உற்பத்தி செய்யலாம். இதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கழிவு நீரிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ரப்பர் தொழிற்சாலைகளில் கழிவுநீர் வெளிப்பாடு பெரும் பிரச்னையாக இருப்பதால் இத்தொழில்நுட்பம் மூலம் நிவாரணம் பெற முடியும்.
இவ்வாறு கழிவுநீரை சுத்திகரிக்கும் பொழுது, ஏற்கனவே மிகுந்த மின்சாரத்தை செலவழித்து இயக்கப்படும் சுத்திகரிப்பானின் இயக்கம் நிறுத்தப்படுவதால், அந்த மின்சாரத் தேவையும் தவிர்க்கப்படுகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கலனில் தேங்கும் திடப்பொருளும் வெளியேற்றப்பட்டு சிறந்த இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.
உயர்வேக எரிவாயு உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் நகரக்கழிவு, பல்வேறு வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளின் கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்வதுடன் சிறந்த பலனாக எரிவாயு சக்தியைப் பெற்று மின்சாரமும் உற்பத்தி செய்ய முடிகின்றது. இத்தகைய தொழில்நுட்பம் கழிவு நீரில் மாசு நீக்கும் தொழில்நுட்பமாகவும், அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத தொழில்நுட்பமாகவும் விளைகிறது. 
எனவே இத்தகைய தொழில்நுட்பத்தினை எளிதில் உபயோகித்து சிறந்த பலனைப் பெற முடியும். 
தகவல் : முனைவர் சௌ.காமராஜ், உயிர்சக்தி துறை, வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.பல்கலைக்
கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422 - 661 1276.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Soure: 

No comments:

Post a Comment