Tuesday 23 December 2014

விவசாயிகளுக்கு ஓர் எச்சரிக்கை: குப்பைகளை மேயும் பசுக்களுக்கு இரைப்பை நோய்

First Published : 24 December 2014 05:27 AM IST
பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகள் பெரும்பாலும் குப்பைகளில் மேய்வதால் அவற்றுக்கு இரைப்பை நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்புதான் பிரதானத் தொழிலாக விளங்குகிறது. ஒரு காலத்தில் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர், சோளத்தட்டுகளை தங்கள் நிலங்களிலேயே விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாராசரியை விட குறைந்த அளவிலேயே மழை பெய்துள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேகமாக தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன.
இதனால் தற்போது விளை நிலங்கள் அனைத்தும் வேகமாக குடியிருப்புகளாக மாறி வருவதால் விவாசாயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், விவசாயம் பாதிப்படைந்து வருவதால் கால்நடை வளர்ப்பிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு வழங்க வேண்டிய தீவனத்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த தொடர் மாற்றங்கள் காரணமாக, இரைக்காக கால்நடைகள் குப்பைகளில் மேயும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உத்தரவிட்டும் கூட, இன்று வரை காஞ்சிபுரம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.
இதனால் குப்பைகளில் மேயும் கால்நடைகள், அவற்றில் இருக்கும் பாலிதீன் பைகள் உள்ளிட்ட மக்காத கழிவுகளை உட்கொண்டு விடுகின்றன.
இவ்வாறு தொடர்ந்து உண்பதால் அந்த கால்நடைகளுக்கு இரைப்பை நோய் ஏற்படுவதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:
கால்நடைகளுக்கு ரோமன், ஒமோசம், அபோமேசம், ரெட்டிகுளம் என 4 வகை இரைப்பைகள் உள்ளன.
உணவு உட்கொண்டதும் அவை முதலில் ரோமன் இரைப்பைக்கு வரும்.
அந்த இரைப்பையில் உள்ள உணவுகளை மீண்டும் வாய்க்கு கொண்டு வந்து அவற்றை அசைபோட்டு விழுங்கும் தன்மை கால்நடைகளுக்கு உண்டு.
ஆனால் மக்காத கழிவுகளை அதிக அளவில் கால்நடைகள் உட்கொண்டால், அவற்றின் இரைப்பை அடைப்பட்டுவிடும்.
இதனால் அங்கிருந்து அசை போடுவதற்கு உணவுகள் வெளியே வராது.
இதனால் மாடுகளுக்கு இரைப்பை நோய் ஏற்பட்டு இறந்துபோகும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே கால்நடைகளை குப்பைகளில் மேயவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.

Source: விவசாயிகளுக்கு-ஓர்-எச்சரிக/article2586255.ece

No comments:

Post a Comment