Friday 19 December 2014

பொங்கலுக்காக வெல்லம் தயாரிப்பு பணிவிலை குறைந்தபோதும் உற்பத்தி தீவிரம்

பதிவு செய்த நாள்

20டிச
2014 
02:49

கோபி:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அச்சு மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி, கோபி மற்றும் அம்மாபேட்டை பகுதியில் தீவிரமாக நடக்கிறது.விவசாயமே பிரதான தொழிலாக கொண்ட, ஈரோடு மாவட்டத்தில், கரும்பு உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆண்டு பயிரான கரும்பை, தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் வழங்குகின்றனர். மேலும், சிலர் தாங்களாகவும், நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்கின்றனர்.ஈரோடு மாவட்டத்தில், சித்தோடு, கவுந்தப்பாடி, சர்க்கரை மார்க்கெட்டுக்கு சர்க்கரை மற்றும் அச்சு வெல்லத்தை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். கோபி, கவுந்தப்பாடி, பவானி மற்றும் அம்மாபேட்டை பகுதியில், அதிளகவில் அச்சு மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கப்படுகிறது.நன்கு வளர்ந்த கரும்பை, ஆலை மூலம் பிழிந்து, சாறு எடுக்கப்படுகிறது. அதை பெரிய இரும்பு கொப்பரையில் ஊற்றி வெல்லப்பாகு ஏற்படும் வரை காய்ச்சி, அதற்கென உள்ள அச்சில் வார்க்கப்படுகிறது. 30 கிலோ சிப்பமாக, மூட்டைகளில் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.தைப்பொங்கலுக்கு, இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில், அச்சு மற்றும் உருண்டை வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது. வெளியூர் ஆர்டர்கள் கிடைத்த நிலையில், கோபி பகுதியில் உருண்டை மற்றும் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.இதுபற்றி, கோபி பச்சமலையை சேர்ந்த உருண்டை வெல்லம் தயாரிப்பாளர் கிருஷ்ணன் கூறுகையில், கடந்த, 27 ஆண்டுகளாக அச்சு மற்றும் உருண்டை வெல்லம் தயாரித்து, விற்பனை செய்கிறேன். பொங்கலுக்கு உருண்டை மற்றும் அச்சு வெல்லம் பயன்படுத்தப்படுகிறது.
தை பொங்கலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில், வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ரசாயன சேர்க்கையின்றி தயாரிக்கிறோம்.சாதாரண சோடா உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. 30 கிலோ கொண்ட வெல்லம், 1,050 முதல், 1,100 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு டன் கரும்பு, 2,500 ரூபாயில் வாங்குகிறோம். அதில், இருந்து, 105 கிலோ வெல்லம் கிடைக்கும்.தயாரிக்கப்பட்ட அச்சு மற்றும் உருண்டை வெல்லம், சித்தோடு, கவுந்தப்பாடி, கோவை, கேரளா, நெய்க்காரப்பட்டி, பழனி ஆகிய ஊர்களுக்கு அனுப்புகிறோம்.தற்சமயம் உருண்டை வெல்லத்துக்கு கட்டுபடியாகாத விலையே உள்ளது. பொங்கலை முன்னிட்டு, அரசே, வெல்லத்தை கொள்முதல் செய்தால், வெல்லம் தயாரிக்கும் தொழில் செய்வோர் லாபம் அடைவர், என்றார்.

Source: 

No comments:

Post a Comment