Monday 24 November 2014


தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

First Published : 25 November 2014 04:46 AM IST
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
லட்சத் தீவுகளுக்கு அருகில் நிலவி வந்த வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.
இதன் காரணமாக தென் தமிழகத்தின் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்யும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
மேலும் அந்தமான் தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. இந்த சுழற்சி, இன்னும் ஓரிரு நாள்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் வாய்ப்புள்ளது. எனவே, தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றனர் அதிகாரிகள்.
திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேர நிலவரப்படி பாம்பன், கழுகுமலை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மழை பெய்துள்ளது.

Source: http://www.dinamani.com/tamilnadu/2014/11/25/தமிழகத்தில்-இன்று-மழைக்கு-வ/article2540011.ece

No comments:

Post a Comment